அரசியலில் அல்லாடும் விஜயதாரணி!விஜய் கட்சியில் சேர திட்டமா?
நாகர்கோவில்,ஜூலை.25 – முன்னாள் எம்.எல்.ஏ வான விஜயதாரணி விஜய்கட்சியில் சேரப் போவதாக பரபரப்பு கிளம்பி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத் தில் விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய 3 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென் றவர் விஜயதரணி. அதனால், தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற தனக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்தார் விஜயதரணி.ஆனால், அது கை கூடாமல் போனது.காங்கிரஸ் கட்சி யின் சட்ட மன்றக் குழு தலைவர் செல்வப் பெருந்தகைக்குகாங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்ட தால், அவர் வகித்த சட்ட மன்றக் குழு தலைவர் பதவி யாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார் விஜயதரணி. அதையும் சிலர் லாபி செய்து அவரை விட ஜூனியரான கிள்ளியூர் எம்.எல்.ஏ – வான ராஜேஷ் குமாருக்கு கொடுக்க வைத்தனர். இதனால் கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்ட விஜயதரணி, அடுத்த ஒரே வாரத்தில் டெல்லியில் நட்டாவை சந்தித்து தன்னை பாஜக – வில் இணைத்துக்கொண்டார்.அப்பதே, “வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமை வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்” என தனது விருப்பத்தையும்எதிர்பார்ப்பையும் அவர் சொல்லி இருந்தார். ஆனால், அவரை கணக்கில் கொள் ளாமல் பழையபடிபொன்.ராதாகிருஷ்ணனுக்கே கன்னியாகுமரி தொகுதி யில் போட்டியிட வாய்ப்பளித்தது பாஜகதலைமை. இதனால் ஏமாற்ற மடைந்த விஜய தரணி, “மக்களவைத் தேர்தலில் வாய்ப்ப ளிப்பதாகச் சொல்லித்தான் என்னை பாஜக – வில்சேர்த்தார்கள். அதனால் தான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன். ஆனால்,தேர்தலில் எனக்கு வாய்ப்பளிக்காததோடு மட்டுமல்லாது ஆறுமாதங்களா கியும் எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்காமல் இருக்கிறார்கள். இது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது” என சுமார் பத்து மாதங்களுக்கு முன்பே பொது வெளியில் புலம்ப ஆரம்பித்தார். இதைப் பார்த்து விட்டு குமரி மாவட்ட காங்கிரஸில் இருக்கும் அவரது நலன் விரும்பிகள் தொடர்ச்சியாக சமூக வலை தளங்களில் விமர்சனங்களைபதி விட்டு வருகின்றனர்.இந்த நிலை யில் தான், விஜயதரணி நடிகர் விஜய்யின் தவெக – வில் இணை யப்போகிறார். அங்கே அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப் போகிறார்கள் என சிலர் செய்தி களை சுற்றவிட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், விஜயதரணிக்கு திமுக – வும் அதிமுக – வும் ஆஃபர் வைத்திருக்கிறது என்றும் கொளுத் திப் போட்டுக் கொண்டிருக் கிறார் கள். இது குறித்து விஜய தரணி யிடமே கேட்டபோது,“பாஜக- வில் முக்கிய பதவி வழங்குவார் கள் என நான் எதிர்பார்த்திருந்ததுஏமாற்றம் தான். இருந்த போதும்,பாஜக ஆளும் தேசிய கட்சி என்பதால் காலதாமதம் ஆனாலும் முக்கிய தருணத்தில் எனக்கு பதவி வழங்கு வார்கள் என்ற நம்பிக்கைஉள்ளது. சட்டமன்றத் தேர்தல் வருவதால் தேர்தல் பிரச்சாரத்திலும் வாக்குச் சேகரிப்பி லும் என்னை முழுமை யாக ஈடுபடுத்திக்கொள்ளதிட்டமிட் டுள்ளேன்.இதற்கிடையில், நான் விஜய் கட்சியில் இணைவதாகவும், திமுக, அதிமுக எனக்கு தூது விடுவதாகவும்வதந்திகளைப்பரப்பி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி யில் தொடர்ந்து மூன்று முறை எம். எல்.ஏ – வாக இருந்திருக்கிறேன் என்பதால் எதிர் பார்ப்பில் இருக்கும் சிலர் இப்படியான செய்தி களை பரப்பி வருகிறார்கள். பாஜக – வில் இணைந்தநான் மட்டு மல்ல… நடிகர்கள் சரத்குமார், குஷ்பு போன்றவர்களும் பாஜக – வில் எந்தப்பதவியும் இல்லாமல் தான் இருக்கிறார்கள். பாஜக – வை பொறுத்தவரை தகுந்த பதவிகளை தாமதமாகவே வழங்குவார்கள். எனக்கும் சட்ட மன்றத்தேர்தலுக்குப் பிறகு முக்கிய பதவியை பாஜக வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் விஜயதாரணி.






