நெல்லை,செப்.27- நெல்லை பிரபல ரவுடி எஸ்டேட் மணி கேரளாமாநிலம் மூணாறு பகுதியில் கைதுசெய்யப்பட்டார். இவரை வேலூர் போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாகமடக்கி பிடித்தனர்.நெல்லை தச்சநல்லூரை அடுத்த சத்திரம்புதுக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி மகன்மணிஎன்ற எஸ்டேட்மணி (45). இவரது குடும்பத்தினர் கேரள மாநிலம் மூணாறு எஸ்டேட்டில் பகுதியில் வசித்து வருகின்றனர்.இதையடுத்து எஸ்டேட்மணி சொந்த ஊருக்கு அடிக்கடிவந்து செல்வார் என்றுகூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து அவர் பசுபதிபாண்டியனின் தீவிரஆதரவாளராக இருந்துவருகிறார். இந்நிலையில் எஸ்டேட் மணி மீதுசுத்தமல்லி மதன் கொலை மற்றும் தச்சநல்லூர்,முறப்பநாடு,மானூர், ஈரோடு உள்ளிட காவல் நிலையங்களில் 7 கொலை வழக்குகள் உட்பட 29 வழக்குகள் உள்ளது.இதனால் அவரை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்டில் வைத்து பராமரித்து வருகின்றனர். கொலை மிரட்டல் இவரை வழக்கில் வேலூர் போலீசார் கைது செய்து அந்த வழக்கில் ஜள்ளாமீனில் னர்.வெளியே வந்த எஸ்டேட்மணி காவல்நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அதனால்வேலூர் போலீசார் அவரை வலை வீசி தேடி வந்தனர்.இதனிடையே எஸ்டேட்மணி மூணாறில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.அதைத்தொடர்ந்து நள்ளிரவு அங்கு விரைந்து சென்ற போலீசாரின் வேட்டையில் தேர்தல் எஸ்டேட் மணி சிக்கினார். அவரை வேலூர் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையை கலக்கிய பிரபல ரவுடி எஸ்டேட் மணி துப்பாக்கி முனையில் கைது! மூணாறில் போலீசார் சுற்றிவளைத்தனர்!!






