திட்டக்குடி இந்தியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

திட்டக்குடி இந்தியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இந்தியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

திட்டக்குடி வட்டத்தில் மிகவும் சிறப்பு மிக்க பழமையான இந்தியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் முன்னாள் தாளாளர் இ பி ராமசாமி நல்லாசியுடன் கடந்த சனிக்கிழமை அன்று அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை செய்முறை மூலம் வெளிப்படுத்தினர். மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர். இதில் பள்ளி தாளாளர் இ பி ஆர் அரசு ,பள்ளி முதல்வர் ஆர் சௌந்தரம், மற்றும் இணை முதல்வர் ஆர். ராதிகா துணை முதல்வர் ஆர். சௌந்தரி, அட்மின்நோடல் ஏ. ராதா மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு கண்காட்சியை சிறப்பித்தனர்.