சேரன்மகாதேவி சப் கலெக்டர் பொறுப்பேற்பு!

சேரன்மகாதேவி சப் கலெக்டர் பொறுப்பேற்பு!
சேரன்மகாதேவி ஆகஸ்ட் 12 : சேரன்மகாதேவியின் 131 வது சப் கலெக்டராக ஆயுஷ் குப்தா ஐஏஎஸ் பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக அவர் நெல்லையில் கலெக்டர் சுகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சேரன்மகா தேவியின் சப் கலெக்டராக இருந்த அர்பித் ஜெயின் ஐஏஎஸ் கடந்த மார்ச் மாதம் பணி மாறுதலில் சென்றார் அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட நில எடுப்பு பிரிவு துணை கலெக்டர் சிவகாம சுந்தரி சேரன்மகாதேவி பொறுப்பு சப் கலெக்டராக இருந்தார் இந்நிலையில் நேற்று சேரன்மகாதேவியின் 131 வது சொற்களாக ஆயுஷ் குப்தார் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு சக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் முன்னதாக சப் கலெக்டர் நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகமானது கடந்த நூல் 1914-ம் ஆண்டு உதயமானது 111 ஆண்டுகள் கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த சப் கலெக்டர் அலுவலகமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும் சேரன்மகாதேவி சப் கலெக்டராக 1984 ஆம் ஆண்டு பணிபுரிந்த சக்தி காந்ததாஸ் ஐஏஎஸ் இந்திய ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக கடந்த 6 ஆண்டுகளாக இருந்தார். தற்போது புழக்கத்தில் ரூபாய் நோட்டுகளின் பெரும்பாலான கையெழுத்து இவருடையதாகும் டிச. 2018 முதல் டிச. 2024 வரை ரிசர்வ் வங்கியின் கவனமாக இருந்த சக்தி காந்ததாஸ் ஐஏஎஸ் தற்போது பிரதம மந்திரியின் முதன்மை செயலாளர் ஆக உள்ளார் இவரைப் போன்று சேரன்மகாதேவி சப் கலெக்டராக கடந்த 1995- 96 இல் பணிபுரிந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் என்பவர் தமிழர் தேர்வு அதிகாரியாக கடந்த 2015 முதல் 2018 வரை இருந்தார். தற்போது தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் சேர்மாதேவி சப்- கலெக்டராக 1993- 95-ல் இருந்தார் சேர்மாதேவிகள் சப்- கலெக்டராக இருந்த பலர் தற்போது நாடு முழுவதும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் இந்நிலையில் சேரனுமாக தேவி 131 வது சப் கலெக்டராக ஆய்ஷ் குப்தா பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.