பிரஷாந்த்- நிறைய ஹீரோயின்சை கையில் பிடிச்சிருக்கேன்.. ஹீரோயின் கெட்டப்பில் புகழ்..தன்னை பிடிக்கும்போது வேறு மாதிரியாக இருந்திருக்குமே …

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் 5வது சீசன் தற்போது மிகவும் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் குக்குகள் சமைக்க, கோமாளிகள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட, அவர்களுடன்  அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை களைகட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ரிலீசாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் பிரஷாந்தின் அந்தகன் படக்குழுவினரும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்றுள்ளனர்.

செஃப் தாமு தொடர்ந்து நடுவராக தொடர்ந்துவரும் நிலையில் கோமாளியாக ஏராளமான ரசிகர்களை கடந்த சீசன்களில் கவர்ந்துவந்த மணிமேகலை இந்த ஷோவின் ஆங்கராக தர்ஷனுடன் இணைந்துள்ளார்.  அந்தவகையில் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துவரும் இந்த ஷோவின் அட்ராக்ஷன்களில் ஒன்றாக நிகழ்ச்சியின் நடுவர்களும் காணப்படுகின்றனர். அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை கலர்ஃபுல்லாக மாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் அந்தகன் படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். நடிகர் பிரஷாந்த், பிரியா ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கோமாளிகள், குக்குகளுடன் தொடர்ந்து தங்களது உற்சாகத்தை பகிர்ந்துக் கொண்டனர்.  இதில் புடவை அணிந்துக் கொண்டு புகழ் கோமாளியாக நடைபோட்டு வருகிறார். அவரது புடவைக்கட்டு மற்றும் நளினம் பார்வையாளர்களை வெகுவாக உற்சாகப்படுத்தும்வகையில் அமைந்துள்ளது.

ஜோயா போன்ற கெட்டப்புடன் இந்த ஷோவில் புகழ் வந்த நிலையில், அவரது வாய்ஸ் மட்டும் தனக்கு வரவில்லை என்று புகழ் குறைப்பட்டுக் கொள்கிறார். தொடர்ந்து பிரஷாந்திடம் சரோஜாதேவி வாய்சில் தன்னை தெரிகிறதா என்று அவர் கேட்பதாகவும், சிவாஜிகணேஷன் படத்தில் என்று பிரஷாந்த் துவங்குவதாகவும்  தன்னை சரோஜாதேவியாக ஆக்கிவிட்டதாக புகழ் கூறுகிறார். தொடர்ந்து புகழை கையில் பிரஷாந்த் தாங்கிப் பிடிப்பதாகவும் காணப்பட்டது. இதனிடையே தான் நிறைய ஹீரோயின்சை கையில் தாங்கி பிடித்துள்ளதாக பிரஷாந்த் கூறுகிறார். இடையில் பேசும் புகழ், தன்னை பிடிக்கும்போது வேறு மாதிரியாக இருந்திருக்குமே என்று கூறுவதாகவும் காணப்பட்டது. மொத்தத்தில் இந்த வார ஷோவில் கோமாளிகளுடன் இணைந்து பிரஷாந்தும் கலாட்டாவில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.