பெரியகுளத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

தேனி, செப்.03- தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில்,மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்திற்கான பூஜை நடத்தப்பட்டு பெரியகுளம் பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.ஸ்டார் சினிமாஸ் முகேஷ் T செல்லையா தயாரித்து வழங்கும் இப்படத்தினை சீமராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் இயக்குகின்றார். நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் கதாயாகியாக அறிமுகநாயகி தாரணிகா நடிக்கின்றார். கலை டைரக்டர் சரவணன், கேமரா பாலசுப்பிரமணி.பெரியகுளம் பகுதியில் எடுக்கப்பட்டுள்ள அனைத்துப்பபடஙகளும் மாபெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெறும் வெற்றி பெறும் என சினிமா ரசிகர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.