இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும்- டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்­டன்ஆக.5,ரஷ்யா­வி­டம் இருந்து அதிக அளவு எண்­ணெய்­பொ­ருட்கள் மற்றும் ராணுவ
உப­க­ரணங்­கள் வாங்குவதால், இந்தியப்பொருட்­களுக்கு 25சதவீத வரி விதித்து அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப் உத்­த­ரவிட்டுள்­ளார். இந்­தப்புதிய வரி வரும் 7-ம்தேதி முதல் அமலுக்கு வரவுள்­ளது.ரஷ்­யா­வி­டம் இருந்து எண்­ணெய் கொள்முதல் செய்­வதை இந்தியா தொடர்ந்­தால்,மேலும் நட­வடிக்­கை கள் எடுக்­கப்­படும் என வெள்ளை மாளிகை அச்­சுறுத்தல் விடுத்துள்­ளது.அமெ­ரிக்­கா­வின் இந்த நட­வடிக்­கையைத் தொடர்ந்து,ரஷ்­யா­வி­டம் இருந்து எண்­ணெய்ப் பொருட்­கள் கொள் முதலை இந்தியா குறைத்து விட்­ட­தாகக் கூறப்­பட்­டது.ஆனால், வழக்­கம் போல எண்­ணெய் கொள்முதல்     செய்யப்­பட்டு வருவதாக மத்திய அரசு சார்­பில் தெரிவிக்கப்பட்டுள்­ளது.இந்த நிலை­யில், இந்தி யாவுக்­கான வரி மேலும் உயர்த்­தப்­படும் என்று அமெ­ரிக்க அதி­பர் எச்­ச­ரிக் கை விடுத்துள்­ளார். இது தொடர்­பாக டிரம்ப் கூறு­கை­யில், ரஷியாவி­டம் இருந்து வாங்கும் எண்­ணெயை திறந்த சந்­தை ­யில் அதிக லாபத்திற்கு இந்தியா விற்கி­றது.உக்­ரைன்போரில் எத்தனை பேர் பலியாகிறார்­கள் என்ற கவலை இந்தியாவுக்கு இல்லை. இந்தியாவின் நட­வடிக்­கைக்கா­கவே அந்த நாட்டின் மீதான வரியை கணி­ச­மாக உயர்த்துவேன்” என்று கூறினார்.