திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருச்செந்தூர், ஆக.3-திருச்செந்தூர் வெயிலு கந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆக. 11ம்  தேதி தேரோட்டம் நடை பெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலு டன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திரு விழா கொடிப்பட்ட மானது ரதவீதி மற்றும் மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயி லுக்கு வந்து, காலை 5.30 மணிக்கு கொடிமரத்தில் காப்புகட்டிய சிவக்குமார் வல்லவராயர் கொடி யினை ஏற்றினார். அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி காலை 6.45மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன்பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திரு வீ திலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், விதாய கர்த்தா சிவசாமி தீட்சிதர், திருவிழா பிரிவு ஆறுமுகராஜ் , மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர் கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்ட னர். பத்து நாள்கள் நடை பெறும் திருவிழாவில் காலை, மாலை இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்த ருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் திருவிழா வை முன்னிட்டு வருகின்ற ஆக. 11ம் தேதி காலை 6.30மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞான சேகரன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.