பரமக்குடி, ஆக.3 ஸ்ரீ சுந்தரராஜ ப்பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் காலை காப்பு கட்டப்பட்டது. பின்னர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு எழுந்தரு ளினார்.அங்கு வேத மந்திரங்கள்முழங்க கொடி மரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.இரவு பெருமாள் அன்னவாக னத்தில் வீதிவலம் வந்தார். ஆக.,4 பெரிய திருவடியான கருட வாகனத்தில் அருள் பாலிப்பார். ஆக.,6 இரவு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஆக.,8 காலை நவநீதகிருஷ்ணன் சேவை, இரவு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் பெருமாள் அருள் பாலிப்பார். ஆக.,9 காலை 10:35 மணிக்கு ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது.ஆக.,10 காலை தீர்த்தவாரி உற்ஸவம், இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும்.கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.தேவஸ் தான மேனேஜிங் டரஸ்டி ரெங்காச்சாரி.
டிரஸ்ட் &டிரசரர் என்.ஆர். நீலகண்டன். டிரஸ்டிகள் டி ஆர் ரமேஷ்பாபு. கே டி.கிரிதரன்.ஜி என் கோவிந்தன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
பரமக்குடி சௌராஷ்ட்ரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா!






