அம்பாசமுத்திரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார் விழா

அம்பாசமுத்திரம், மார்ச் 06:
விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இப்தார் நிகழ்ச்சி இன்று (06.03.2026) பத்தமடை மல்கா மல்லியார் ஜும்மா பள்ளிவாசல் திடலில் நடைபெற்றது.

பத்தமடை நகர விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பத்தமடை நகர துணைச் செயலாளர் S.P.N. கான்சா மைதீன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் M.C. கார்த்திக், மாநில செயலாளர் மாதவி, (அம்பை–ஆலங்குளம்) மண்டல துணைச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

சேரை ஒன்றிய செயலாளர் வே. தளபதி மாதவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் அம்பை தொகுதி மாவட்ட செயலாளர் பாஸ்கர், சமூக ஊடக அமைப்பாளர் நடராஜன், சேரை ஒன்றிய அமைப்பாளர் ஆண்ட்ரூஸ், பத்தமடை பேரூராட்சி தலைவர் ஆபிதா ஜமால், சேரை காங்கிரஸ் கவுன்சிலர் ஆணி, மகளிர் விடுதலை இயக்கம் வி. தாட்சாயினி, சேரை மதிமுக ஒன்றிய செயலாளர் குட்டி பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கணிக்கன்சா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் M.P. சேக், மதிமுக தலைமை கழகச் செயலாளர் K.V. மலுக்கா மலி, திமுக நகர அவைத் தலைவர் காந்தி, திமுக நகர செயலாளர் S.M.K. சிந்தா மதர், காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் சுல்தான், முஸ்லிம் லீக் கட்சி கான்சா, திமுக மாநில பேச்சாளர் மும்பை சின்னாபாய், எஸ்டிபிஐ மாவட்டத் துணைச் செயலாளர் செய்யது சிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பத்தமடை நகர செயலாளர் நடராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேலும் R. முருகன், A. சுந்தர், V. சரவணன், பக்கீர் முகைதீன், சுரேஷ், மகேஷ், நிஜந்தன், கணேஷ் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இறுதியில் பத்தமடை நகர துணைச் செயலாளர் வி. சாமுவேல் நன்றி உரையாற்றினார்.