புதுடெல்லி, ஆக.2 – டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அதேபோல்
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப் பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் சிறந்த துணை நடிகர் பிரிவில் எம்எஸ் பாஸ்கருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டில் வெளியான திரைப்படங் களில் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 2023ம் ஆண்டில் தமிழில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படத் துக்கு தேசிய விருது அறிவிக்கப் பட்டுள்ளது. வாடகை வீட்டில் பார்க்கிங் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப் பட்டு இருந்தது.’பார்க்கிங்’ திரைப் படத்தை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். பேஷன் ஸ்டுடியோஸ்,சோல்ஜரஸ் பேக்டரி என்ற நிறுவனம் தயாரித்து இருந்தது.திரைப்படத்தில் நடிகர் கள் ஹரிஷ் கல்யாண், சிந்துஜா, எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடித்து இருந்தனர். அதேபோல் எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறி விக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் திரை ப்படத்தில் சிறப்பாக நடித்ததை பாராட்டி அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படத்துக்கு இசைய மைத்த ஜிவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் தேசிய விருது அறிவிக்கப் பட்டுள் ளது.
எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு – தேசிய விருது அறிவிப்பு!






