ஆணவப் படுகொலைகள் தொடராமல் தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்!

அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் புரட்சிவி.எஸ்.நாகமூர்த்தி  தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள்!!

சென்னை, ஆக.01-தமிழகத்தில் தீவிரமாகி வரும் தீண்­டாமைவன் கொ­டுமை­கள், ஜாதிவெறி ஆண­வப் படு­கொலைகள் தொடராமல் தடுக்க தனிசட்­டம் இயற்ற வேண்டு­மென, அகிலஇந்திய சட்ட உரிமை­கள் நுகர்­வோர் பாதுகாப்­புக் கழகத்தின் தலை­வர் புரட்சி வி.எஸ். நாகமூர்த்தி, தமிழக முத­லமைச்­சருக்கு வேண்டுகோள் விடுத்துள்­ளார்.கடந்த 27ம் தேதி கவின் செல்­வ­க­ணேஷ் (27) என்­பவர் கொலை செய்­யப்­பட்டார். இது தொடர்­பாக பாளை­யங்­கோட்டை காவல் நிலை­யத் தில் வழக்கு பதிவு செய்­யப்பட்டு அந்த வழக்கில் தொடர்பு­டைய பாளையங்­கோட்டை, கே.டி. சி.நகர், மங்­கம்­மாள் சாலை­யைச் சேர்ந்த சுர்ஜித்(23) கைது செய்­யப் பட்டு நீதிமன்ற காவ­லுக்கு உட்­ப­டுத் ­தப்­பட்­டார். இந்நி­லையில் மேற்­சொன்னவழக்கில் சம்­பந்­தப்­பட்ட, பட்டது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்­த­கம் விளை­விக்கும் செயல்­க­ளில் ஈடுபட்ட சுர்ஜித்தை, திருநெல்­வேலி மாநகர போலீஸ் கமிஷ­னர் சந்தோஷ் ஹதிமணி, குண்டர் தடுப்­புச் சட்­டத்தின்கீழ் தடுப்­புக் காவ­லில் அடைக்க உத்­த­ரவிட்டுள்ளார். இதில் முதற்­கட்டவிசார­ணை­யில் கொலைசெய்­யப்­பட்­ட­வ­ரும், குற்றம் சாட்­டப்­பட்ட சுர்ஜித்தின் சகோ­த­ரியும் பழகி வந்த நிலை­யில், இது தொடர்­பான பிரச்னை­யில் இந்த கொலை நடந்துள்­ள­தாக காவல்துறைசார்பில் தெரிவிக்­கப் பட்டுள்­ளது.மேலும்,பாளை­யங் கோட்­டை­யில் தலித் சமூகத்தை சேர்ந்த கவின்செல்வ கணேஷ் படுகொலை செய்­யப்­பட்ட விவ­கார த்தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட சுர்ஜித் மீது குண்­டர் தடுப்பு சட்­டத்தில் வழக்குபதிவு செய்­யப்­பட்ட நிலையில் அவ­ரது பெற்றோர் இரு­வரும் காவல்து­றை­யில் இருந்து பணியிடை நீக்­கம் செய்­யப்­பட்டுள்­ள­னர். குற்­றம் சாட்­டப்­பட்­ட­வரின் தந்தை மற்­றும் தாய்சார்பு ஆய்­வா­ளர் என்­பதால் விசாரணை பார­பட்­சமின்றி நடக்க இரு­வ­ரும்பணி இடை நீக்­கம் செய்யப்­பட்டு இந்த வழக்கு சிபிசிஐடி விசார­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக காவல்துறை சார்பில் தெரிவிக்­கப்­பட்டுள்­ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் தொடர்ந்து தீவிரமாகிவரும் தீண்­டாமைவன் கொடுமை­கள், ஜாதி
வெறி ஆண­வப் படு­கொலைகள் தொடராமல் தடுக்க கடுமை­யான தனிசட்­டம் இயற்ற வேண்டும்
என்று அகில இந்தியசட்ட உரிமை­கள் நுகர்வோர் பாதுகாப்­புக் கழகத் தின் தலை­வர் புரட்சி வி.எஸ்.நாகமூர்த்தி,தனதுஅறிக்­கையில் தமிழகமுதலமைச்­சருக்கு வேண்டு­கோள் விடுத்துள்­ளார்.