மை டிவிகே உறுப்பினர் சேர்க்கை செயலியை தொடங்கிவைத்த விஜய்..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் ‘மை டிவிகே’ என்னும் உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சித் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி னார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், அடுத்தடுத்து தவெக வை வலுப் படுத்தும் நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் தவெக சார்பாக ‘மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர்’ என்னும் பரப்புரை முன்னெடுக் கப்பட்டுள்ளது. இந்த பரப்புரை யின் ஒருபகுதியாகவும், கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை விரைவு படுத்தவும் ‘மை டிவிகே’ (விசீஜிக்ஷிரி) என்னும் செயலியை அறிமுகப்படுத்தி யுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவ லகத்தில் அக்கட்சித்தலைவர் விஜய், தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து செயலியை தொடங்கி வைத்து ஒரே குடும்பத்திச் சேர்ந்த 3 தலைமுறை உறுப்பினர் களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை யை வழங்கினார். இந்தச் செயலி வாயிலகவும் பொது மக்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொள்ளலாம். மேலும், தவெக தேர்தல் பரப்புரை முன்னெடுப்பை யும் விஜய் நேற்று தொடங்கி வைக் கிறார். தமிழக வெற்றிக்கழகத்தில் இருக்கக்கூடிய 69 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி முகவர் கள் ஒவ்வொருவரும் தங்களுக் கென்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதி களில் உள்ள அனைத்து வீடுகளி லும் நேரில் சென்றும் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி களை மேற்கொள்வார்கள். அது மட்டுமல்லாமல், இந்தச் செயலி வாயிலாகக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து,கழகத்தில் உறுப்பி னர்களைச் சேர்க்கும் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.