நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறித்து கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி களின் மேம்பாட்டுக்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன இந்த திட்டங்கள் மாற்றுத்திறனாளி களின் இல்லத்திற்கு சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இல்லந் தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்காக மாவட்டத் தில் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதி களில் முன் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக் கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளி கள் குறித்து விவரங்களை சேகரிக் கும் பணி நடைபெற்றுள்ளது. கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் முன்களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பு பணி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் சார்பில் நடைபெறும் இக்கணக்கெடுப்பிற் காக தங்கள் வீடுகளுக்கு வரும்முன் களப்பணியாளர்களுக்குபொதுமக்கள் அனைவருக்கும் தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி.






