மாவட்ட அளவில் கணினி குலுக்கலில் பிரிக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்கள் தொகுதிவாரியாக அனுப்பும் பணி தொடக்கம

சென்னை: தமிழக சட்டப்­பே­ர­வைத் தேர்­த­லில் மாவட்ட அள­வில் கணினி குலுக்கல் மூலம் பிரிக்­கப்­பட்ட வாக்குப்­பதிவு இயந்­தி­ரங்­கள்,தொகுதி வாரியாக அனுப்­பும் பணி நேற்று தொடங்­கியது. தமிழக சட்டப்­பே­ரவைத் தேர்­த­லில் பயன்­ப­டுத்த வேண்டிய மின்னணு வாக்குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் (இவிஎம்) மற்றும் வாக்கா­ளர், தான் செலுத்­திய வாக்கினை சரி­ பார்க்கும் கருவிகளின் ( விவி­பாட்) முதற்கட்ட பரிசோ­த­னைக்கு பிறகு, அந்­தந்த மாவட்டதேர்­தல் அதிகாரிகள் கட்டுப் ­பாட்டில் பாதுகாப்­பாக வைக்கப்­பட்டுள்­ளன. இந்த தேர்­த­லில் மொத்­தம் தலா 90 ஆயி­ரம் கட்டுப்­பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்­திவு இயந்­தி­ரங்­கள், 97,500 விவி­பாட் கருவிகள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. இதில் பயன்­பாடு போக, பழு­தாகும் ­போது மாற்றுவ­தற்கான 20 சத­வீத இருப்பு வைப்பு இயந்­தி­ரங்­களும் அடங்கும் . மாவட்ட அள­வில் வைக்­கப்­பட்டுள்ள இந்த இயந்­தி­ரங்­களை,அங்கீகரிக்கப்­பட்ட கட்சி பிர­திநிதிகள் மற்றும் மாவட்ட தேர்­தல் அதிகாரிகள்முன்­னிலை­யில் கணினிகுலுக்­கல் முறை­யில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி மார்ச் 23-ல்நடை­பெற்­றது. அதைத்தொட ர்ந்து, இயந்­தி­ரங் களை தொகுதிவாரியாக,தேர்­தல் நட த்தும் அலுவலர் அலு­வலகம் செயல் ­ப­டும் வைப்­ப­றைக்குக் கொண்டு செல்­லும் பணி,அனைத்து அங்­கீ கரிக்கப்­பட்ட அர­சியல் கட்சி பிர­தி நிதிகள் முன்­னிலை­யில் நேற்று தொடங்­கியது.அதன்­படி சென்­னை­யில் மாவட்ட தேர்­தல் அதிகாரி ஜெ.கும­ர­குரு ப­ரன்தலை­மை­யில் நடை­பெற்­றது . இதே­ப ோன்றுஅனைத்து மாவட்டங்களிலும் , அந்­தந்த மாவட்ட தேர்­தல் அதிகாரிகள் தலை­மை­யில் பணிகள் நேற்று  தொடங்கின. தமிழகம் முழுவதும் தேர்­தல் பணியில் ஈடு­ப­டும் அனைத்து வாக்­குச்­சாவடி அலுவலர்­களுக்கும், அந்­தந்த தேர்­தல் நடத்தும் அதிகாரி அலுவலக வளாகத்தில் பயிற்சிகள் வழங்­கப்பட உள்­ளன.