சேரை,ஜூலை,22 – நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி திமுக ஒன்றிய இளைஞரணி துணை
அமைப்பாளராக இருந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மறைந்தார். இதனால் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 25,000 காசோலை திமுக இளைஞரணிஅறக்கட்டளை யிலிருந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆணை படியும், நெல்லைகிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் பரிந்துரையின் பேரிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ. பிரபாகரன் வழங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், துணை அமைப்பாளர்கள் வேல்முருகன்,ஆகாஷ், சேரன்மாதேவி மேற்கு ஒன்றிய செயலாளர்
முத்துகிருஷ்ணன், வீரவநல்லூர் நகர செயலாளர் சுப்பையா, மாவட்ட பிரதிநிதி மூலச்சி சீவலமுத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் நிதி உதவி வழங்கல்!






