பத்தமடையில் பள்ளி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை !

 

பத்தமடையில் பள்ளி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பன்னீர் தாஸ். இவரது மூத்த மகள் இகாஷினி வயது (15). இவர் அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மாணவி இகாஷினி கடந்த 19-ஆம் தேதி தன்னுடன் படிக்கும் மாணவியிடம் புத்தகம் வாங்கி வருவதாக சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மாணவியை தேடி வந்த நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் பள்ளி சீருடையுடன் மாணவி ஒருவர் உடல் மிதப்பதாக பத்தமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சேரன்மாதேவி வித்தியணைப்பு துறையினர் உதவியோடு அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், காணாமல் போன பள்ளி மாணவி இகாஷினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மாணவி உடலை பிரதே பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
முதற்கட்ட விசாரணையில் இறந்து போன பள்ளி மாணவி செல்போன் அடிக்கடி பயன்படுத்தியதை அவரது பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வருகிறது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என பத்தமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.