விஜயதசமியன்று பத்தமடை ராமசேஷய்யர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா!

2.10.25 வியாழக்கிழமை விஜயதசமியன்று பத்தமடை ராமசேஷய்யர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கியது. விழா நிகழ்ச்சியினை அனுசுயாஅமுதகுமார் தொகுத்து வழங்கினார்கள். வரவேற்புரை ரேவதி பழனி பாண்டியன் நிகழ்த்தினார்கள். விழாவில் கலந்து கொண்ட முன்னாள் இந்நாள் ஆசிரியர்கள் சிறப்புரை வழங்கினார்கள். அனைத்து முன்னாள் மாணவர்கள் மாணவிகள் முன்னிலையில் ராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி (ஸ்தாபிதம்1892) முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு தொடங்கப்பட்டது THE RAMASESHIER HIGHER SECONDARY SCHOOL (SINCE1892) OLD STUDENTS ASSOCIATION பத்தமடை திருநெல்வேலி மாவட்டம். 2025ஆண்டுபத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மஞ்சுபகவதி, கார்த்திக்,தனலட்சுமி அவர்களுக்கும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற ஐஸ்வர்யா, ஆயிரத்தான், கனகவல்லி, அவர்களுக்கும் SMART WATCH பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர் பெருமக்கள், அலுவலக உதவியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், குடிநீர் வழங்கல், சிறப்புஅழைப்பாளர்கள், அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். நமது பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தற்போது மருத்துவத் துறையில் மருத்துவராக இருக்கிறார்கள் அவர்கள் ஒரு மாணவரின் கல்விச் செலவை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தது மிகவும் மகிழ்ச்சியாகஇருந்தது. பழையமாணவ மாணவிகளை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் மன மகிழ்ச்சியாக இருந்ததை நாம் அனைவரும் அறிவோம்! விழாவில் முன்னாள் மாணவ, மாணவிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் உயர்திரு T.K.லட்சுமணபாரதிMA BSc MEd MPhill உதவி தலைமை ஆசிரியர் உயர்திரு ஸ்ரீராம் தமிழ்ஆசிரியர் சங்கரலிங்கம் வரலாறுஆசிரியர் சுப்பிரமணியன் ஓவிய ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் அறிவியல் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் உயர்திருV.காந்தி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அலுவலக உதவியாளர் வெள்ள பாண்டியன் தொழிலதிபர்கள், பொதுமக்கள், கலந்து கொண்டனர் இவ்விழா வினை கூட்டமைப்பு தலைவர் திருமதி சங்கரி நடராஜன் பூபதி(1994) துணைத் தலைவர் திரு ஜாபர் அலி(19970) செயலாளர் திரு முகமது இப்ராஹிம் (1994) மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.