கல்லூரி பின்வாயில் வழியாக வெளியேறி சென்ற பேராசிரியை நிகிதா!

திண்டுக்கல்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு விசாரணையின் போது போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இவர் மீது புகார்  கெரடுத்த பேராசிரியை நிகிதா, திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர்கல்லூரியில் தாவரவியல் துறைத்தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்துக்குப்பிறகு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பேராசிரியை நிகிதா கல்லூரிக்கு வரவில்லை. இந்நிலையில்,நேற்று முன் தினம் கல்லூரிக்கு   சென்று பணியைத் தொடங்கினார். இதையறிந்த, செய்தயாளர்கள் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். உளவுத்துறை போலீஸாரும் அவரை கண்காணித்தனர். இதையடுத்து, கல்லூரி முடிந்து மலையில் பின் வாயில் வழியாக வெளியேறினார். இந்நிலையில், அவர், ஜுலை 27 – ம் வரை மருத்துவ விடுப்பில் சென்று விட்டதாகதகவல் வெளியாகியுள்ளது.