பாரதிய ஜனதா கட்சிக்கு இ.பி.எஸ்’டம்மி வாய்ஸா?’

முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!!

மதுரை, ஜூலை.11-“கூட்டணியில் இருக்கிறோம். ‘டம்மி வாய்ஸ்’ ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” எனமுதல்வர் ஸ்டாலி னுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.விருது நகர் செல்வதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைவந்தார்.அவர்விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “பாஸ்டாக்குக்கு தமிழக போக்கு வரத்து கழகம் பாக்கி
வைத்துள்ளது. டீசல், பெட்ரோல்  போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். அரசு போக்குவரத்து மானியம் கொடுத்து, அதை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதல்வர் செய்ய வேண்டிய வேலையை செய்யாததால் போக்கு வரத்துக் கழகம் பாதிக்கப் படுகிறது. தமிழ்நாடு இங்கே தான் இருக்கிறது. எதற்கு ஓரணியில் பயணம் செய்ய வேண்டும். எப்போது அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததோ, அப் போது இருந்தே முதல்வருக்கு ஜுரம் வந்து விட்டது. தோல்வி பயமும் வந்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி பேசுகிறார்கள்.இன்றைக்கு மக்கள் விரோத ஆட்சியாக திமுக உள்ளது. நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜன நாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜகவின் ‘டம்மி வாய்ஸ்’ தான் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் கூறுகி றார். அவருக்கு இப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை . முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசவேண்டிய கருத்தைதான் பேசியிருக்கிறார்.கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணன் வைகோ எப்போதும் அதிகம் கோபப்படக் கூடியவர். கூட்டத்தில் இருக்கும் போது சத்தம் போடுவதை எல்லா இடங்களிலும் செய்கிறார். சாத்தூர் கூட்டத்தில் பத்திரிகை யாளர்கள் தாக்கப்பட்டு இருக்கின் றனர். உண்மையில் அது கண்டிக்க த்தக்கது,வருந்தத்தக்கது.முருக பக்தர்கள் மாநாட்டை அமைச்சர் சேகர்பாபு சங்கிகள் கூட்டம் என்கிறார்.முருகர் மாநாடு நடப்ப தற்கு முன் பாகவே 6 நாட்களில் மட்டும் இரண்டரை லட்சம் பேர் வந்திருந்தனர். ஆறாவது நாள் 5 லட்சம் பேர் வந்தனர் என்றார்.