தேர்தல் ஆணையத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்!
அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாகவும் தகவல்!!
சென்னை, ஜூலை. 09–
பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
எழுதியுள்ளார். அதில்பா.ம.க.வுக்கு நானே தலைவர்; அன்புமணிஅல்ல
என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதா சுக்கும், அவரது மகன் அன்பு மணிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகிறது.இருவரும் தற்போது எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். அடுத்தடுத்து போட்டிக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒருவரின் ஆதரவாளர்களை மற்றவர் நீக்கி வருகின்றார்கள். அதனால் உண்மையான பா.ம.க.யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.பா.ம.க. தலைவராக
அன்புமணி செயல்பட்டு வந்தார். மோதல் ஏற்பட்டதை அடுத்து அவரை அப்பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு செயல் தலைவர் என்ற அந்தஸ்த் துக்கு கீழே இறக்கினார்.ஆனால் கட்சியின் நிறுவனருக்கு இது போன்ற நடவடிக்கை எடுக்க
அதிகாரம் இல்லை என்றும், பொதுக்குழுவுக்குத் தான் அனைத்து அதிகாரமும் இருப்பதாகவும் அன்புமணி கூறினார். ஆனால் கட்சியை தோற்றுவித்தது
நான்; எனக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது;நான் சொல்வதுதான் சட்டம்; நான் அறிவிப்பவர் தான் அதிகாரப் பூர்வவேட்பாளர்கள் என்று ராமதாஸ் பதிலடி கொடுத்தார். அது மட்டுமல்லாது இரு தலை
வர்களும் மாவட்ட அளவில் தலைவர்களை சந்திக்கத் தொடங்கினார்
கள். இந்த விவகாரத்திலும் இருவ ருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ஆகவே கட்சியை
முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அன்புமணி ராமதாஸ் டெல்லிக்கு சென்றதாகவுத் தெரிவிக்கப்பட்டது. இப்படிப்
பட்ட நிலையில் அன்புமணியை பா.ம.க. நிர்வாகக்குழுவில் இருந்து ராமதாஸ் நீக்கினார். நேற்று திண்டிவனம் அருகேஉள்ள ஓமந்தூரில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தினார்.இந்த கூட்டத்தில் சேலம் மேற்குத் தொகுதி எம்.
எல்.ஏ. அருள் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டார்கள். ராமதா
சின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி மற்றும் பேரன் முகுந்தன் ஆகியோரும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், எனது மன வேதனை அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும்.
தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்துப்போட்டியிடும். வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம்
எனக்கே உள்ளது. வேட்புமனு தொடர்பான ஏ. மற்றும் பி. படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரமும் எனக்கே உள்ளது என்று தெரிவித்தார்.இப்படிப்பட்ட நிலையில் அவர்தேர்தல் ஆணை
யத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக
தெரியவருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:–அன்பு மணி யின் தலைவர்பதவிக் காலம் மே 28–
ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. மே 29முதல் நானே தலைவராக
செயல்பட்டு வருகிறேன்.அன்பு மணியின் செயல் பாடு சரியாக இல்லாததால் அவர் செயற்தலைவர் என்ற பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.எனக்கு ஆதரவாக 1,413 செயற்குழு உறுப்பினர்களும், 21 பொதுக்குழு உறுப்பினர்களும்
கையெழுத்திட்டுள்ளார்கள். அவர்களுடைய புகைப்படங்களையும்
ஒட்டியுள்ளனர்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்!






