ஒரே நாடு ஒரே தேர்­தல் திட்­டம்- மத்திய அமைச்­ச­ரவை ஒப்பு­தல்!

புது­டெல்லி, செப்.19 நாடு முழுவதும் நாடாளுமன்­றத்துக்­கும், மாநில சட்­ட­ச­பைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்­தல் நடத்துவதில் பிர­தமர் மோடி உறுதி­யாக இருக்கி­றார்.வெவ்­வேறு நேரங்­களில் தேர்­தல் நடப்­ப­தால், வளர்ச்சிபணிகள் பாதிக்­கப்­ப­டு வ­த கவும் ,தேர்­தல் செலவு அதிகரிப்­ப­தாகவும் அவர் கருதுகி­றார்.’ஒரே நாடு, ஒரேதேர்­தல்’ என்றஇந்த திட்­டத்தை அமல்­ ப­டுத்துவ­தற்­கான சாத்தியக்கூறு­கள் பற்றி ஆய்வு செய்­வ­தற்­காக முன்னாள் ஜனாதி­பதி ராம்­நாத் கோவிந்த் தலை­மை­யில் ஒருஉயர்மட்­டக்குழுவை மத்தியஅரசு அமைத்தி­ருந்­தது.இந்­நி­லை­யில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்­மட்டக் குழுவின் பரிந்து­ரை­களை அமைச்­ச­ரவை ஏற்­றுக்­கொண்­ட­தாக மத்திய மந்­திரி அஸ்­வினி வைஷ்­ணவ் தெரிவித்துள்­ளார்.இதன்­படி ராம்­நாத் கோவிந்த் குழுவின் பரிந்­து­ரை­களுக்கு பிர­த­மர் மோடி தலை­மை­யில் மத்­திய அமைச்­ச­ரவை கூட்­டத்தில் ஒப்பு­தல் அளிக்­கப்­பட்டுள்­ள­தாக தகவல் வெளியாகி உள்­ளது.எதிர்­ வ­ரும் நாடா­ளுமன்ற குளிர்­கால கூட்­டத் ­தொ­டரில் இது மசோ­தாவாக தாக்­கல் செய்­யப்­படும் என்று எதிர் பார்க்­கப்­ப­டுகி­றது.பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான 3வது ஆட்­சி­யின் 100 நாட்­கள் நிறை­வ­டைந்­திருப்­பதை கொண்­டாடும் வித­மாக, ‘ஒரேநாடு ஒரே தேர்­தல்’திட்­டத்திற்கு ஒப்பு­தல் அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூ­றப்­படுகி­றது.