இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மதுரையில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் மாநாட்டை நடத்தியது!

‘இயற்கை விவசாயத்தை தீவிரமாக செயல்படுத்த விவசாயிகளுக்கு திறனதிகாரமளிப்பது’ என்ற தலைப்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முதன்மை புரவலராகக் கொண்டு, அமுல் மற்றும் ரிச்பிளஸ் ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன், மதுரையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த FPO மாநாட்டை இன்ஃபினிட் சேவா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் (FPO) தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய இயற்கை / ஆர்கானிக், விவசாயத்தை ஊக்குவிக்கும் இந்தியாவின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாகும். இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலு மிருந்து 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் இந்திய மரபுப்படி குத்துவிளக்கேற்ற மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியுமான திரு. அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா, இம்மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு இந்நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.

அமுல் டெய்ரி இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு. கோபால் சுக்லா, இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் திரு. T. தனராஜ்; ரிச்பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் சாரங்கன் மற்றும் நபார்டு (தமிழ்நாடு) வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் ஆனந்த் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், “எதிர்கால இந்திய விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முழுமையாக உணர்ந்து, அதனை பேணி பாதுகாக்கும்நடை முறைகளில் தான் அடங்கியுள்ளது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நம்புகிறது” என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், “எங்களது FPO/FPC நிதியுதவி திட்டத்தின் மூலம் ரூ.10 கோடி வரை கடன்களையும், இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயி களுக்காக உருவாக்கப்பட்ட எங்களது ஹரித் கிராந்தி திட்டத்தையும் வழங்குவதன் மூலம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, நாட்டின் காலநிலை இலக்குகளை அடைகின்ற பயணத் தை நாங்கள் தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறோம். இன்று, பல்வேறு விவசாயத் திட்டங்களின் கீழ் 119 விவசாயி களுக்கு ரூ.24.02 கோடி மதிப்பிலான கடன் ஒப்புதல்களை வழங்குவதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மகிழ்ச்சி யடைகிறது.” என்று கூறினார். அமுல் மற்றும் ரிச்பிளஸ் நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு வழங்கும் ஒத்துழைப்பை மனமார பாராட்டிய அவர், நிலைப்புத் தன்மையுள்ள வளர்ச்சிக்கான ஒரு முழுமையான சூழமைவை உருவாக்குவதற்கும், விவசாயத்தில் இயற்கை / ஆர்கானிக்முறைகளைக் கடைப்பிடிப்பதில் விவசாயிகளின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் இதுவொரு சிறந்த முயற்சி என்று குறிப்பிட்டார்.

அமுல் டெய்ரி இந்தியா நிறுவனத்தின் தலைவர் கோபால் சுக்லா, தனது சிறப்புரையில் விவசாயிகளின் நலனுக்காக அமுல் நிறுவனம் நீண்டகாலமாக கொண்டுள்ள அர்ப்பணிப்பையும், சிறப்பான செயல்முயற்சிகளையும் எடுத்துரைத்தார். மேலும், வலுவான கொள்முதல் அமைப்புகள் மற்றும் நியாயமான விலை வழிமுறைகள் மூலம் இயற்கை விவசாய நடை முறைகளுக்கு அமுல் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்ற உறுதி மொழியை அவர் வழங்கினார்.

ரிச்பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அசோக் சாரங்கன், இயற்கை / ஆர்கானிக் விளைப் பொருட்களில் தடமறிதலுக்கான தன்மை மற்றும் தரஉத்தரவாதத்தின் முக்கியத்துவத்தைவலியுறுத்தினார். “தரமான இடுபொருட்கள், தொழில்நுட்ப அறிவு மற்றும் நம்பகமான சந்தை ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளித்து, சான்றளிக்கப்பட்ட இயற்கை விவசாயத்தில் தமிழ் நாட்டை ஒரு முன்னணி மாநில மாக மாற்றுவது எங்களதுநோக்கம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய இன்ஃபினிட் சேவாவின் தலைவர் திருமதி. நளினி பத்மநாபன், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) “விவசாய வளர்ச்சியின் தூண்கள்” என்று வர்ணித்தார். மேலும், “இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல்-ரிச்பிளஸ் ஆகியவை இணைந்திருக்கும் இக்கூட்டணியானது, இயற்கை விவசாயத்தை நமது நாட்டின் விவசாயிகள் விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதிலும் மற்றும் அதன் மதிப்பிலும், பொருளாதார சிக்கனம், ஆதாயங்கள் விஷயத்திலும் ஒரு பெரும் நிலைமாற்றத்தை உருவாக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும், விவசாயிகளுக்கு தடங்கலின்றி வங்கிக் கடன் கிடைப்பதை ஏதுவாக்குவதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது. இத்தகையஅணுகுமுறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை (IOB) நிலைப்புத்தன்மையுள்ள வேளாண்மையை ஊக்குவித்து, அதற்கான நிதி உதவியை வழங்கு வதில் ஒரு முன்னோடியாக நிலை நிறுத்துகிறது.

அரசின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்) என்ற தொலை நோக்குப் பார்வைக்கு இணங்க, அனைவரையும் உள்ளடக்கிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய வளர்ச்சிக்கான ஒரு தெளிவானப் பாதையை உருவாக்குவதில் இம்மா நாடு வெற்றியடைந்திருக்கிறது.