இன்று 5.8.2024 சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம் கிளை ஆகியவை இணைந்து உலக தாய் பால் வார நிகழ்வை நடத்தியது. நிகழ்விற்கு இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம் கிளையின் மூத்த உறுப்பினர் மருத்துவர். பத்மாநாபன் மற்றும் மருத்துவர். ராஜலட்சுமி சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டு கர்ப்பிணி தாய் மார்களுக்கு தாய் பாலின் முக்கியத்துவம் குறித்து வி ழிப்புணர்வு வழங்கினார்கள். சேரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் k. சாந்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் மருத்துவர்கள் சாந்தி சுசீந்திரன் அமுதா தேவி அருணாசலம் மற்றும் லியோராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சத்து மாவு மற்றும் சுண்டல் வழங்க பட்டது. நிகழ்வின் முடிவில் செவிலியர்களுக்கு தாய் பால் வார நிகழ்வு குறித்து விநாடி வினா போட்டி மருத்துவர் அமுதா தேவி அவர்களால் நடத்த பட்டு செவிலியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டத்து
சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம் கிளை ஆகியவை இணைந்து உலக தாய் பால் வார நிகழ்வை நடத்தியது






