கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவர் ஐயா இளைய பெருமாள் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
இன்று அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஐயா L.இளைய பெருமாள் அவர்களின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் முத்தையா நகர் எதிரில் உள்ள கோகுலம் இல்லத்தில் ஐயா இளையபெருமாள் அவர்களின் திருவுருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டசெயலாளர்
அரங்க தமிழ் ஒளி மற்றும் L.E.P மக்கள் நலச் சங்க நிறுவனருமான பொறியாளர்.கோகலே ஆகியோர் தலைமையில் ஐயா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் விசிக பரங்கிப் பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தனகுமார்,வெளிச்சம் மாறன்,தொழிலதிபர் லட்சுமிபதி,திமுக சார்பில மலர் மன்னன், சங்கர் காங்கிரஸ் பிரமுகர் செல்வமணி.அதிமுக. தேவராஜ் பேரவை நிர்வாகி சுந்தர். திலீப்.இளம்.ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் சமூக ஆர்வலர் திருமூர்த்தி நன்றி கூறினார்.






