AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் என, ரயிலில் சாதாரண வகுப்பு பெட்டிகளை குறைக்கவும, கட்டணங்களை உயர்த்தவும் வேண்டாம் !

மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, ஜூன்;28 “குளிர்சாதன (AC) பெட்டிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என சாதாரண வகுப்புப் பெட்டிகளை குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களை யும் உயர்த்த வேண்டாம்.” என பிரதமர் நரேந்திர மோடிக்கும்,ரயில்வே அமைச்சர் அஸ்வின்வைஷ்ணவிவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரயில் கட்டணங்கள் வரும் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்(x) பக்கத்தில் இந்திய ரயில்வே என்பது ஏழை நடுத்தர மக்களின் பயணங் களுக்கானது மட்டுமல்ல, அது, அவரது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்த போது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந் திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப் படவுள்ள ரயில் கட்டணங்களை யும் குறைத்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியுள்ளது. பிரதமர் மோடியையும், ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ண வையும் மக்களின் சார்பாக நான் கேட்டுக் கொள்வது (AC) பெட்டிகள் உயர்த்த வேண்டும் என சாதாரண வகுப்பு பெட்டிகளை குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களை யும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார் கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.