திருச்செந்தூர்,ஜூன்.24
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை யாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த மாதம்2-வது முறையாக நேற்று முன் தினம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் வளாகத்தில்தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் எண்ணும் பணி நடந்தது. கோவில் முதுநிலை கணக்கு அலுவலர்ராஜாராமன், தென்காசி உதவி ஆணையர் செந்தில்குமார், கோவில்உதவி ஆணை யர் நாகவேல்,கண்காணிப்பாளர் ரோகிணி,ஆய்வர் செந்தில்நாயகி, தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன்,பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன்,சுப்பிரமணியன்,கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுலவேத பாடசாலை உழவாரபணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த உண்டியல் எண்ணிக்கையில் மொத்தம் ரூ.2 கோடியே 59 லட்சத்து 32 ஆயிரத்து 514 பணம் கிடைத்துள்ளது. அதே போல் 1 கிலோ 515 கிராம் தங்கமும், 17 கிலோ 96 கிராம் வெள்ளியும், 883 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.






