தசரா திருவிழாவை முன்னிட்டு குலசை முத்தாரம்மன் கோயிலில் மாலை அணிய குவிந்த பக்தர்கள்

தூத்துக்­குடி: தசரா திருவிழாவை முன்னிட்டு புனித விரதம் துவங்கும் ஆயிரக்­க­ணக்­கான பக்­தர்­கள் மாலை அணியகுலசே­கரன் ­பட்டி­னம் முத்­தா­ரம்­மன் கோயி­லில் குவிந்­த­னர். உலக அளவில் பிரசித்தி பெற்ற தூத்துக்­குடி மாட்­டம் குலசேரன் ­பட்டி­னம் முத்­தா­ம்­மன் கோயி­லில் இந்­தாண்­டுக்­கான ரா திருவிழா வரும் க்.3ம் தேதி கொடி­யேற்­றத்து­டன் துவங்குகிறது. விழாவின் சிகரமான மகிஷாசூர­சம்­ஹா­ரம் வரும் அக். 12ம் தேதி குலசை கடற்­க­ரை­யில் லட்­சக்­க­ணக்­கான பக்­தர்­கள் முன்னி­லை­யில் நடை­பெறும். தசரா திருவிழாவை முன்னிட்டு வேடம் அணியும் பக்­தர்­கள் 41 நாள், 31 நாள், 21 நாள் என தங்­கள் வச­திக்கேற்ப விரதம் இருந்து வேடம் அணிவது வழக்­கம். இதில் பெரும்­பா­லான பக்­தர்­கள் 21 நாள் விரதத்தை விரும்பி மேற்கொள்கின்­ற­னர். நேற்று(செப்.23) முதல் வரும் அக்.12ம் தேதி வரை 21 நாட்கள் வரும் இதை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று அதிகாலை முதல் குலசேகரப்பட்டினத்திற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு நீண்ட வரிசையில் நின்று மாலை அணிவித்து விரதம் துவங்கினர். காளி வேடம் அணியும் பக்தர்கள் கிரீடம், சூலாயுதம், சடைமுடி போன்ற பொருட்கள் 21 நாளும் பூஜையில் வைத்து வழிபடுவதால் தசரா பொருட்கள் வாங்க உடன்குடி பஜார் வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.