நயினார் நாகேந்திரன் கேள்வி
சட்டம் ஒழுங்கு சீரழிந்து கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என பாஜக மாநிலதாலவர் நயினார் நகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தொழில் வளமும் கல்வி வளமும் நிறைந்து செழித்தோங்க வேண்டிய கோவை, தற்போது சட்டம் ஒழுங்கு சீரழிந்து பயங்கர வாதத் தின் புகலிடமாக மாறிவருவது ஏன் என இப்போதாவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்க மளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ்தளத்தில்பதிவிட்டுள்ளதாவது, கோவையில் அரபுக்கல்லூரி என்றபோர்வை யில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு க்காக நால்வர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அ தி ர் ச் சி ய ளி க் கி ற து .கடந்த 2022-ஆம் ஆண்டுகோவை அருள் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடந்த பயங்கர வாத குண்டு வெடிப்புத் தாக்குதலை,வேறும் சிலிண்ர் விபத்து என திமுக அரசு பூசி மொழுக முயன்ற நிலையில், அதற்கு அடுத்து தொடர்ச்சியாக தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தோர் தேசியப் புலனாய்வு அமைப்பால்கோவையிலிருந்து கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர்கள் கொலை, மறுபுறம் கோயில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவிற்கு பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என கோவை சுற்று வட்டாரப் பகுதி களை மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி யுள்ளது திராவிட மாடல் அரசு. தொழில் வளமும் கல்வி வளமும் நிறைந்து செழித்தோங்க வேண்டிய கோவை, தற்பேரது சட்டம் ஒழுங்கு சீரழிந்து பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன் என இப்போதாவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.






