Gpay மூலம் 112 பேரிடம் நூதன மோசடி: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கோவை தம்பதி கைது!

கோவை, ஜூன்.21 கோவை மாவட் டம் ,தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர்
சங்கனூர், நல்லாம்பாளையம் சாலையில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி கடையை மூடிக் கொண்டிருந்துள்ளார் .அப்பேரது , அவருடைய கடைக்கு ஒரு இளம் தம்பதிவந்துள்ளனர்.அவர்கள் சக்திவேலிடம்நாங்கள் அருகில் உள்ளமருத்துவ மனைக்கு சிகிச்சைபெறுவதற்காக வந்தோம். ஏடிஎம் கார்டில் பணம் உள்ளதால் மருத்துவமனைக்குவரும் அவசரத்தில் பணத்தைஎடுக்காமல் வந்துவிட்டோம்.இங்குள்ள ஏடிஎம் இல் பணம்எடுப்பதற்காகச் சென்றோம்.ஆனால்,ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை.மருத்துவ மனையில் சிகிச்சை பெற அவசர மாக 2,000 ரூபாய் தேவைப் படுகிறது.உங்களிடம் கையில் இருக்கும்பணத்தைக் கொடுத்தால் எங்களது செல் போனில் இருந்து ஜிபி மூலம் பணம் அனுப்பி விடுகிறோம் என்று கூறி உள்ளனர். மெடிக்கல் எமர்ஜென்சி எனக்கூறியதை நம்பி சக்திவேல் அவர்களிடம் 2,000 ரூபாயைக் கொடுத்துள்ளார். அதைவாங்கிக் கொண்டவர்கள் ஜிபே மூலம் பணத் தை அனுப்பிவிட்டதாக கூறிதங்கள து  செல் போனில் இருந்து குறுஞ்செய்தியை சக்தி வேலிடம்  காண்பித்துள்ளனர். சக்திவேலும் அந்த குறுஞ்செய்தியைப்பார்த்து நம்பியுள்ளார். அதைத் தொடர்ந்து, அவர்கள் இன்னும்       இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் அதனை ஜிபே மூலம் அனுப்பி விடுவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பி சக்தி வேல் மீண்டும் ரூ. 2,000 பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார். மீண்டும் அவர் கள் ஜிபே குறுஞ்செய்தியைக் காண்பித்துள்ளனர்.பின்னர், சிறிது நேரத்திற்குப் பின்னர் சக்திவேல்  தனது வங்கி கணக்கு இருப்பை சரி பார்த்துள்ளார். அப்போது தான், அந்த தம்பதி 4 ஆயிரம் ரூபாய் அனுப்பியதாகக் கூறிய பணம் வரவில்லை என்பதையும், தன்னிடம் 4 ஆயிரம் ரூபாயை மோசடி செய்து விட்டு தப்பிச் சென்றதும் சக்திவேலுக்கு தெரியவந்துள்ளது .இதுகுறித்து உடனடியாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்குத் சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாராண நடத்தினர். விசாரணையில் இதேபோல இந்த தம்பதி பலரிடம் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது இதைத்தொடர்ந்து காவல் ஆணையர் சரவண சுந்தர்மோசடி செய்த தம்பதியைப் பிடிக்கதனிப்   படைகள் அமைத்து உத்தரவிட் டார். கண்காணிப்பு கேமரா வில்  பதிவான காட்சிகள் மூலம் மோசடி தம்பதி வந்த இரு சக்கர வாகனங் கள் பதிவினை காவல் துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசா ரணையில் அந்த தம்பதி சுகுணா புரம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது ரிஸ்வான், அவரதுமனைவி ஷர்மிளா பானுஎன்பதும், அவர்கள் இரண்டுபேரும் காதலித்து ஒன்றரைமாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த தம்பதியை காவல் துறை யினர் கைது செய்தனர்.விசாரணை யில், அந்த தம்பதி மொத்தம் 112 பேரிடம் ரூ. 2 லட்சத்துக்கு மேல் பண மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. பின்னர்,அவர்கள்     இருவரையும் காவல் துறை யினர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி,கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதகுறித்துகாவல் துறையினர் கூறியதாவது: கைதான ரிஸ்வான் முன்பு கால் டாக் ஸிடிரைவராக வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஒரு டிரைவர் நூதன முறையில் பணத்தை இழந்ததாகக் கூறினார். அதாவது செல் போனில் ஜிபேயில் பணம் அனுப்பும் போது பே மற்றும் ரிக்வஸ்ட் என இரண்டு குறியீடுகள் வரும், அதில் பே என்று குறியீட்டை அழுத்தினால் பணம் போகும்.ரிக்வஸ்ட் என்றுகுறியீட்டை அழுத்தினால் பணம் போகாது. உங்களிடம் பணம்கேட்கிறார் என்று குறுஞ் செய்தி மட்டும் வரும். இதை சிலர் சரியாக கவனிக்காமல் அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் பணம் வந்து விட்டதாக நினைத்து விடுகிறார்கள். இதைத் தெரிந்து கொண்ட ரிஸ்வான்தனது காதல் மனைவியுடன்சேர்ந்து பலரிடம் நூதனமுறையில் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். பணம் இழந்தவர்கள் செல்போனில் தொடர் பு கொண்டால் உடனடியாக அவர்கள் எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டு வைத்துள்ளனர். சிறிய தொகை தானே என்றுபலரும் புகார் செய்யாமல்
இருந்துள்ளனர். வாடகைவீட்டில் வசித்து வந்த காதல் தம்பதி மோசடி  செய்த பணத்தை வைத்து சொகுசு பொருள்களை வாங்கி உல்லாச மாக இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.