மாங்காய் வியாபரிகள் சாலையில் மாங்காய்களை கொட்டி மறியல் செய்தார்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழகம், ஆந்திரா எல்லாப் பகுதியில் உள்ள பரதராமி கிராமத்தை நேற்று காலை மாங்காய் பயிரிடும் விவசாயிகள் டிராக்டரில் மாங்காய்களை ஏற்றி வந்து பரதராமி பேருந்து நிலையம் அருகே உள்ள கெங்கையம் கோவில் எதிரில் சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதில் மாங்காய் டன் 1-க்கு 4,000 மானியம் வழங்க வேண்டும். டன் 1-க்கு15,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாம்பழம் ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா, கே.வி. குப்பம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் மாங்காய் விளைச்சல் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து உங்கள் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.