இன்று 5.12.2024 வியாழன்கிழமை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு சேரன்மகாதேவி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை கூனியூர் அண்ணா தொழிற்சங்கம்சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு அலங்கரித்து வைத்துள்ள அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் சேரன்மகாதேவி அ.இ.அ.தி.மு.கழகத்தின் ஒன்றிய கழகச் செயலாளர் பா.மாரிசெல்வம் அவர்கள், திருநெல்வேலி புறநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் உச்சிமாகாளி அவர்கள், சேரன்மகாதேவி பன்னீர் செல்வம், கூட்டுறவு சங்க துணை தலைவர் E.மாரிமுத்து,
பணிமனை செயலாளர் களக்காடு தி.நம்பிராஜன், பொருளாளர் சக்திவேல், முன்னாள் தலைவர் நெல்லையப்பன், விபத்து பிரிவு செயலாளர் சந்திரன், இணைச் செயலாளர்கள் கருப்பசாமி, செல்லப்பாண்டி, சீவலப்பேரி பாலசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், அர்ஜுனன், பாலசுப்பிரமணியன், நம்பியார் வேலு, வீரவநல்லூர் ஐயப்பன், வீரகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி!கூனியூர் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மலர் அஞ்சலி!!






