சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் முடிவுப்படி நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு கால முறை ஊதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் D பிரிவு வழங்கிட வேண்டும்,
அரசு ஆணை எண் 33 திருத்தம் செய்து கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும், இறந்துவிட்ட மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு CPS பிடித்தம் செய்த பணப்பலனை உடனடியாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்,புதிய ஓய்வு ஊழியத்தை ரத்து செய்ய பழைய ஓய்வு ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
இக்கூட்டத்திற்கு சேரன்மகாதேவி வட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையிலும், திசையன்விளை வட்ட தலைவர் இராஜகோபால், ராதாபுரம் வட்ட தலைவர் கணேஷ், ஆகியோர் .முன்னிலையிலும், அம்பை வட்ட தலைவர் கோவிந்தராஜ், நாங்குநேரி வட்டத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் வரவேற்புரை, மாநில செயலாளர் பிச்சு குட்டி, மாநில செயலாளர் நாராயணன், மாவட்ட
பொருளாளர் முகமது ரபீக், மாவட்ட மகளிர் அணி தலைவி கனக லட்சுமி, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து,மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர் பூமாரி, மாவட்டத் துணை செயலாளர் ஆதிலிங்கம், கோட்ட தலைவர் முத்துராமன், மாவட்ட துணைத் தலைவர் பெரியதுரை முத்தையா, மாவட்டத் துணை ஒருங்கிணைப் பாளர் சித்திரை செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர் மற்றும் பல கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிராம உதவியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கை!சார் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!






