நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை, சார்ந்த மக்கள் நீதி மையம் கட்சியினர்மருத்துவக் கல்லூரிக்காக உடல் தானம் தருவதாக ஒப்புக்கொண்டு கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை, சார்ந்த மக்கள் நீதி மையம் கட்சியினர் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் 16 பேர் மருத்துவக் கல்லூரிக்காக உடல் தானம் தருவதாக ஒப்புக்கொண்டு கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

02.12.2024 அன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் மனுக்கள் சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்களை பெறப்பட்டது.இதில் முக்கியமாக மக்கள் நீதி மையத்தின் முன்னாள் நகர செயலாளர் அறிவொளி சரவணன் இறந்தது நினைவு கூறும் வகையில் மக்கள் நீதி மையத்தின் கட்சியினரும் பொது நல ஆர்வலர்களும் 16 பேர் உடல் தானம் மற்றும் உறுப்பு தானம் தருவதாக ஒப்புக்கொண்டு மனு வழங்கப் பட்டது , இந்த முழு உடல் தானம் அனைத்தும் மாவட்ட மருத்துவக் கல்லூரி ஆராளிணிச்சிக்காக மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு தருகிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மதிப்பிற்குரிய உமா அவர்கள் டிஆர்ஓ சுமன் , சமூக பாதுகாப்பு சப் கலெக்டர் பிரபாகரன் , மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்இந்த கடிதத்தை கொடுக்கும் நிகழ்வை , மக்கள் நீதி மையத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சித்ரா பாபு முன்னிலையில் ஏற்பாடு செளிணியப்பட்டது. அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை அதிகாரிகள் பாராட்டினர்.இது போன்ற முழு உடல் தானம் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும். விழிப்புணர்வு மற்றும் எடுத்துக்காட்டாக அமையும் என்று எதிர் பார்க்கலாம்..முழு உடல் தானம் வழங்கியவர்கள் பெயர்கள் பின்வருமாறு.செல்வராஜ் சித்ரா பாபு ,நடராஜன் ,பராசக்தி ,சரஸ்வதி , கிருஷ்ணராஜ், நாகரத்தினம், செந்தில்குமார், ஜெயலட்சுமி, அன்பழகன் ,மல்லிகா ,பரிமளா காந்தி, அர்த்தநாரி,, சோமசுந்தரம்,, தேவராஜன்,, வெண்ணிலா, இவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் ஆவர்