சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய வங்கக்கடல் முதல் கடலோர ஆந்திரா, தெலங்கானா, உள் கர்நாடகா வழியாக கடலோர கர்நாடகா வரை சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.






