48 மணி நேரம் கொட்டித்தீர்த்த கன மழையால் கிருஷ்ணகிரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

கிருஷ்­ணகிரி,டிச.௦3–கிருஷ்­ணகிரி மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பெய்த அடை மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்­ளது. ஊத்தங்கரையில் மட்டும் 5௦ செ.மீ மழை பதிவாகியுள்­ளது. ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியதில் வாகனங்களை இழுத்து சென்­றது.
கிருஷ்­ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்பட நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. குளங்க ளில் இருந்து வெளியேறும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்து நிற்பதால் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் உள்­ளவர்களை பளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்­றனர். மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் சூழ்ந்து பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவே செல்ல வேண்டும். உடனடி தேவை  ஏற்பட்டால் 1077 என்ற எண்ணுக்கு  தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஊத்தங்கரை நீர்வளத்துறையினால் பராமரிக்கப்பட்டு வரும் பாம்பாறு அணைக்கு இன்று 02.12.2024 அதிகாலை முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்சமயம் பாம்பாறு அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 15,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.மேலும் பாம்பாறு அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வெளியேற்­றப்பட்டு வருகிறது.எனவே பாம்பாறு அணையில் கீழ் பகுதியில் உள்ள மூன்­றம்பட்டி, நடுப்பட்டி,  கொண்டம்பட்டி ,பாவக்கல், அத்திப்பாடி, ஆகிய ஊராட்சியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்­ளது ,ஆற்றின் கரை யோரம் உள்ள மக்கள்  தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவே செல்ல வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.கிருஷ்­ணகிரி அருகே உள்ள  போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்குள் வெள்­ளம் புகுந்தது. உடனடியாக அங் கிருந்த  கோப்புகளை போலீசார் அவசரமாக அப்புறப்படுத்தினர். மே லும் சேலம்,  தர்மபுரி, நாமக்கல் மாவட்ட ங்க ளிலும் மழை கடுமையாக பெய்தது.