தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு காட்டூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு 43-வது வட்ட கழக பொருளாளர் கைலாசநாதர் தலைமையில் மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலையில் பகுதி செயலாளர் நீலமேகம் மற்றும் எல்லக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டுமுதியோர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கி சிறப்பு செய்தனர் இந்நிகழ்வில் 43 வது வார்டு வட்டக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்






