போக்சோ வழக்கு: கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு ஜெயில்

திண்டுக்கல், டிச.01 போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் முதல் குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 , 5 5 ,000/-அபராதமும் இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளுக்கு 22
ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,50,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த குஜிலியம்பாறை ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி(19) மற்றும் இவருக்கு உட ந்தை யாக இருந்த இவரது தந்தை சுப்பிரமணி(62) தாய்காளியம்மாள் ( 55 ) ஆகிய 0 3 நபர்களையும் குஜிலியம்பாறை காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இ ந் நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல்  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் மருத்துவர்அ.பிரதீப் , இ.கா.ப அவர்களின்அறிவுறுத்தலின்படி குஜிலியம்பாறை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் அவர்கள், நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் ரஞ்சித் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் திண்டுக்கல்போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முதல் குற்றவாளியான பாண்டி என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 , 5 5 ,000/-அபராதமும், இரண்டாம்,மூன்றாம் குற்றவாளிகளான சுப்பிரமணி மற்றும் இவரது மனைவி காளியம்மாள் ஆகியோருக்கு 22 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ. 1 , 50 ,000/-அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் இந்தாண்டு இதுவரை 64போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது