சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,புதுவை,விழுப்புரம் ,கடலூர் மாவட்டங்களில்நாளை காலை 8:30 மணிமுதல் ஞாயிறு காலை 8:30 மணி நேரத்தில் மிககனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் .
சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.மழை இன்று இரவு தான் தொடங்கும்.புயல் மரக்காணம் அருகே நாளை மாலை அல்லது ஞாயிறு அதிகாலை கரையை கடக்க கூடும்..
இந்த நிகழ்வு தமிழ் நாட்டின் உள் மாவட்டங்கள் வழியாக பயணிக்க உள்ளதால் வட உள் மாவட்டங்களும் பயன் பெறும்.சனி திங்கட்கிழமை வரைவெளியில் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது குறிப்பாக வட மாவட்டங்கள் பயணம் ஏதாவது இருந்தால் தள்ளி வைத்துக்கொள்ளுங்கள்.புயலாக கரையை கடக்கும் என்பதால் தரை காற்று வேகம் அதிகமாக இருக்கக்கூடும் மின்சாரம்துண்டிப்பு ஏற்படலாம் பயணம் நேரங்களில் தரைகாற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் பயணம் தடைபடும் புயலானது நாளை சனிக்கிழமை மாலை அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரக்காணம் அருகே கரை கடக்க வாய்ப்பு வட மாவட்டங்களில் அதி கன மழை வரை பெய்யும் என்பதால் சில இடங்களில் தற்காலிக வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் புயல் சின்னம் தமிழகத்தின் வடக்கு உள்ள மாவட்டங்கள் வழியாக கொங்கு மண்டலங்கள் சென்று அடைந்து பின் அரபிக்கடலில் நீடிக்க கூடும் அடுத்த மூன்று நாட்கள் தமிழ்நாட்டின் பெரும் பாலான இடங்களில் குறிப்பாக வட மாவட்டங்கள் , கொங்கு மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்கள் வட கடலோரங்கள் என பல்வேறு இடங்களில் மழையின் தீவிரம் அதிகமாகஇருக்கும் என்பதால் சற்று கவனம் தேவை.சென்னை முதல் கடலூர் வரை கடலோரமாவட்டங்களில் பரவலாக மிக கனமழையும் ஆங்காங்கே அதிகனமழையும் பதிவாக வாய்ப்புள்ளதால் விவசாய நண்பர்கள் இதற்கு ஏற்ப்ப தயாராக இருக்கவும்.புயல் தமிழகத்தின்கரையை நெருங்கும் வரை மிதமான முதல் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும் நெருங்கிய பிறகு அதிக கனமழை பெய்யக்கூடும் வெள்ளிக் கிழமை இன்று மாலை முதல் படிப்படியாக கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும் மீடியாக்களில் அதிகம் வதந்திகள் வர வாய்ப்புள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு களை மட்டும் நம்பவேண்டும் சந்தேகம் இருந்தால் இந்திய வானிலை மையத்தின் இணைய வழியை பயன்படுத்திக்கலாம்….
உருவானது ஃபெஞ்சல் புயல்






