எழுச்சித்தமிழரின் 62 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு மதுரை கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் குருதி கொடை வழங்கும் விழா

மதுரை 24-8-2024; எழுச்சித்தமிழரின் 62 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு மதுரை கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் குருதி கொடை வழங்கும் விழா இனிதே நடைபெற்றது

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய குருதி கொடை வழங்கும் விழா மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள காத கிணறு பகுதியில் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அரசமுத்து பாண்டியன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது

 

இந்த குருதி கொடை வழங்கும் விழாவில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்

.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கருத்தியல் பரப்புரை மாநில செயலாளர் செல்லப் பாண்டியன் மற்றும் மதுரை கிழக்கு மாவட்ட பொருளாளர் செந்தில்பாண்டியன் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் அமுதன் ஒன்றியச் செயலாளர் கள்ளந்திரி மணிகண்டன் மற்றும் ஈழவளவன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இளமனூர் ராவணன் மற்றும் விடுதலைச்சிறுத்தை கட்சியினர் பலரும் திரளாக கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்