‘டாஸ்மாக்’ கடைகளில் டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கும் முறை தொடங்கியது

சென்னை,நவ.16: காஞ்சிபுரம்,செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில்
மதுப்பாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கும் நடைமுறை தொடங்கப் பட்டுள்ளது.தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் முறை கேடாகக் கூடுதல்
கட்டணம் வசூலிக்கப் படுவதையும் இரவு மற்றும் விடுமுறை காலங்களிலும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்கும்
வகையில் மது பனை விற்பனையை டிஜிட்டல் மயமாக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து,இதற்காக ரூ.294 கோடி ஒதுக்கியுள்ளது.தமிழகத்திலுள்ள அனைத்துக்கடைகளிலும் இந்தவசதியைக் கொண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், முதல்கட்டமாக பரிசோதனை
அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடங்கப் பட்டுள்ளது. இந்த நடை முறை நேற்று முதல் அமலுக்கு வரும் என்று முன்னதாக
தெரிவிக்கப்பட்ட நிலையில், பழைய மதுபானங்கள் இருப்பில் இருந்ததால், புது மதுபாட்டில் களை விற்பனைக்கு கொண்டு வந்த பின்னரே, இந்த திட்டம் தொடங் கப்பட்டுள்ளது.மதுப்பிரியர்கள் இந்த மது பாட்டில்களை வாங்கும் போது , அதனுடன் அதற்கான ரசீதும் வழங்கப்படும்.அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பணத்தை மட்டும் செலுத்தினால் போதும் . கூடுதல் கட்டணம் கொடுக்க
தேவையில்லை. இதற்கு ஜி பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வசதி யும் செய்து கோடுக்கப்பட்டுள்ளது . மதுபாட்டில்களை வாங்கியபி ற கு , அதிலுள்ள க் யூ ஆ ர் கோடு கைப்பேசியில் ஸ்கேன் செய்து பார்த்தாலே அதன் முழு தகவல் களைத் தெரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில்,மதுக்கடைகளில் உள்ள
ஊழியர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமரா மூ லம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையிலும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.