2026 தேர்தலில் 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

தூத்துக்குடி மாந­க­ரம் பிரை­யன்ட் நகர் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்­டம் காமரா­ஜர் சாலை தனியார் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது. கூட்­டத்­திற்கு மேயர் ஜெகன் பெரிய­சாமி, மாந­கர செய­லா­ளர் ஆனந்­த­சே­க­ரன் முன்னிலை வகித்­த­னர். பகுதி அவைத்தலை­வர் பால்­சாமி தலைமை தாங்கினார், கூட்­டத்தில் வட க்கு மாவட்ட திமுக செய­லா­ள­ரும், சமூ­கந­லன் மற்றும் மக­ளிர் உரி­மைத்துறை அமைச்­ச­ரு­மான கீதா­ஜீ­வன் சிறப்பு­ரையாற்றினார். பகுதி செய­லாளர் ராமகிருஷ்­ணன் அனைவ­ரை­யும் வர­வேற்­றார்.நிகழ்ச்சியில் அமைச்­சர் கீதாஜீ­வன் பேசு­கை­யில்;கடந்த நாடா­ளுமன்ற தேர்­தலில் முத­ல­மைச்­சர் அறிவு­ரை­யின்­படி செயல்­பட்டு 40 தொகுதி­க­ளிலும் நாம்வெற்றி பெற்­றோம். அதேபோல் 2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் சிறப்­பாக பணி­யாற்றவேண்டும். 200தொகுதியை இலக்­காக கண்ட முத­ல­மைச்­ச­ரின் லட்சியத்தை நிறை­வேற்றி,அத­னை­யும் கடந்து அதிக தொகுதி­க­ளில் வெற்றி பெறவேண்டும். இதற்­கான தேர்தல் களப்­ப­ணி­களை உறுப்­பினர்­கள் ஒற்று­மை­யுடன் செய்ய வேண்டும் என்­றார்.இக்கூட்­டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொதுஉறுப்பினர் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முடிவின்­படி வார்டு கழக பொது உறுப்பி­னர் கூட்­டங்­களை உடனடி­யாக நடத்து­வது. 2026ம்ஆண்டு சட்­ட­சபை தேர்­தலில் முத­ல­மைச்­ச­ரின் இலக்­கான 200 தொகுதி­க­ளில் வெற்றி பெறகழ­கத் தோழர்கள் முழு மூச்சுடன் தேர்­தல்பணி செய்யவேண்டும்,புதிய இளை­ஞர் அணி, மகளிர் அணி, மாண­வர் அணி உறுப்பினர் சேர்க்­கையை இல்­லந்­தோறும் அனைத்து வார்­டு­க­ளிலும் நடத்து­வது,திமுக பவள விழா­வினைமுன்னிட்டு பிரை­யன்ட்நகர் பகுதிக்கு உட்­பட்டவார்­டு­க­ளில் கழக கொடி கம்­பங்­களை புதுப்பித்து புதிய கொடி­கள் ஏற்­ற­வும்,வீடு­கள்­ தோறும் சென்று வாக்­கா­ளர் பட்டியலை சரிபார்த்து, புதிய வாக்­கா­ளர் மற்றும் விடுபட்ட வாக்­காளர்­களை சேர்த்திட வேண்­டும் என ஐந்து தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.கூட்­டத்தில், மாவட்டதுணை செய­லா­ளர் ராஜ்­மோ­கன் செல்வின், துணைமேயர் ஜெனிட்டா செல்­வராஜ், வடக்கு மாவட்ட திமுக தொண்­ட­ரணி அமைப்­பா­ளர் டி.கே.எஸ்.ரமேஷ், மாவட்ட ஆதி திராவிட நலவாழ்வு தலை­வர் சி.பெருமாள், மாவட்ட மருத்து­வர் அணி தலை­வர் அருண்குமார், மாவட்டஇளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் எம்.கே.பிர­தீப், தக­வல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கி­ணைப்­பா­ளர் சி.என்.அண்­ணா­துரை,மாண­வ­ரணி அமைப்­பாளர் சீனி­வா­சன், சுற்றுச்சூழல்அணி மாந­கர அமைப்­பா­ளர் பார்த்­த­சா­ரதி, வழக்­க­றிஞர் அணி ரூபராஜா, வட்­டச்செய­லா­ளர்­கள் செல்­வ­ராஜ் பால­சுப்பிர மணியன், சிங்­கராஜ், மூக்­கையா சுரேஷ்குமார், சர­வ­ணன்,நவ­நீதன், சுப்­பையாமாமன்ற உறுப்பினர்­கள் ரெக்ஸிலின், விஜய­லட்சுமி, வைதேகி, ராஜேந்திரன், சர­வ­ணகுமார், பகுதி துணை செய­லா­ளர்­கள் தங்க மாரி­யப்­பன்,சங்­க­ரலிங்­கம், பகுதி பிர­திநிதி­கள்கோபால், மயில்,அந்­தோணி சுரேஷ், செல்­வம், பகுதி இளை­ஞரணி நிர்­மல், மாண­வ­ரணி பாலா,சத்யா மற்றும் வட்ட பிரதிநி­தி­கள், நிர்­வா­கி­கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.