கண்ணமங்கலப்பட்டி குடியிருப்பு அருகில் செடிக்குள் பதுங்கி கிடந்த 12 அடி மலைப்பாம்பு

சிவகங்கை, நவ.15 சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அருகே உள்ள கண்ணமங் கல பட்டியில் குடியிருப்பு அருகே இரை தேடி சாலையின் குறுக்கே வந்துள்ளது. அந்த வழியாக இரு சக்கரவாகனத்தில் வந்த நபர்கள் பாம்பை கண்டு பாம்பு பாம்பு என சத்தம் போட்டனர். உடனே அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் டார்ச் லைட்டுடன் விரைந்து வந்தனர். சாலையைக் கடந்த மலைப்பாம்பு செடிகளுக்கு உள்ளே சென்று பதுங்கியது. உடனே சிங்கம் புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்க விரைந்து சென்றனர். டார்ச் லைட்டுடன் மலைப்பாம்பை கண்காணித்து வந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு வீரர்கள் வந்தவுடன் செடிகளுக்குள் பதுங்கியமலைப் பாம்பை காண்பிக்க உடனே பாம்பு பிடிக்கும் கருவியை வைத்து சுமார் 12 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பை போராடி பிடித்து சாக்கு பைக்குள் போட்டு தீயணைப்பு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடிக்கடி சிங்கம்புணரி தாலுகாவில் மலைப்பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இரை தேடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.