அதிமுக ஒன்றிய நிறைவு குழுக்கூட்டம்ஒன்றிய பெருந்தலைவர் நன்றி தெரிவித்தார்

 

புவனகிரியில்
அதிமுக ஒன்றிய நிறைவு குழுக்கூட்டம்

ஐந்தாண்டுகளாக ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி என ஒன்றிய பெருந்தலைவர் நன்றி தெரிவித்தார்

கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய புதிய தலைவர் குழுவானது அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவபிரகாசம், அதிமுக
துணைத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் இணைந்து கடந்த
ஜனவரி 11-01-2020ல்
பதவி ஏற்றது. அதன் பதவி காலம் ஐந்தாண்டு நடைபெற்று தற்போது நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய குழுவின் நிறைவு கூட்டம் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் சி என் சிவப்பிரகாசம் தலைமையில் தற்காலிக அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக துணை தலைவர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் அலுவலகப் பணியாளர்கள் என பலர் பங்கேற்க நடைபெற்றது. அப்போது
கடந்த ஐந்தாண்டு காலமும் ஒன்றிய குழுவுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு தந்த அதிமுக ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் நகர கழக செயலாளர் செல்வகுமார் , கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.