நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா. இவர், கட்டிடங்கள் புணரமைப்பு செய்வதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், ஊட்டியில் இருந்து தனியார் வாடகை காரில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஊட்டி-கோத்தகிரி சாலையில் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர், சிலரிடம் லஞ்சப்பணம் பெற்றுக் கொண்டு செல்வதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அந்த காரை விரட்டி சென்று தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் மடக்கி சோதனையிட்டுள்ளனர்.






