அதி­பர் தேர்­த­லில் வெற்றி; வர­லாறு படைத்­தார் டிரம்ப்!

வாஷிங்­டன்நவ.7 அமெ­ரிக்க அதி­பர்தேர்­த­லில், பல்­வேறு யூகங்க­ளை­யும்,கணிப்­பு­க­ளை­யும் பின்­னுக்­குத் தள்ளி,டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனைபடைத்­துள்­ளார்.அதி­ப­ராக இருந்­தவர், அடுத்த தேர்­தலில் தோற்று, மூன்­றாம் முறை மீண்­டும் வென்று புதியசாதனை படைத்­துள்­ளார். உல­கின் பலநாடு­க­ளில் தேர்­தல் நடந்­தா­லும் அமெ­ரிக்க அதி­பர் தேர்­தல் எப்­போ­துமே ஸ்பெஷல். இம்­முறை நடை­பெற்ற அதி­பர் தேர்­தல் கடந்தகால தேர்­தல்­க­ளின் போது நிகழ்ந்த பர­ப­ரப்­பு­க­ளுக்கு பஞ்­சமில்­லாமல் தான்இருக்­கி­றது .நடப்பு தேர்­த­லில் குடி­ய­ர­சுக்­கட்சி வேட்­பாளர்,முன்­னாள் அதி­பர் டிரம்ப்,ஜன­நா­ய­கக்­கட்சி வேட்­பாளர், தற்­போதைய துணை அதி­பர் கமலாஹாரிஸ் இடை ­யே தான் போட்டி. ஓட்­டுப்­பதிவு முடிந்து முடி­வு­கள் கொஞ்­சம்,கொஞ்­சமாக அறி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன . அந்­நாட்­டில் உள்ள 50 மாகா­ணங்­க­ளில் உள்ள 538 பிர­தி­நி­தி­க­ளில் 270 பேர் ஆத­ரவு பெறும் வேட்­பாளர் தேர்­தலில் அதி­ப­ராக வெற்றி பெற முடி­யும்.தொடக்­கம் முதலே டிரம்ப் அப­ரி­மி­தமான முன்­னி­லை­யில் இருந்­தார். கடி­காரமுள்­ளின் வேகம் நகர, நகர முன்­னிலை நில­வ­ரத்­தில் வித்­தி­யா­சம் இருந்­ததே தவிர வேறு முக்­கியமாற்­றங்­கள் காணப்­பட­வில்லை. தேர்­தல்முடிவு வெளி­யான நிமி­டத்­தில் இருந்தே டிரம்ப் முன்­னி­லை­யில் இருக்­கி­றார். தேர்­தலுக்கு முன்­னரே டிரம்ப், கமலாஹாரிஸ் இடையே உள்ள போட்டி குறித்து கருத்­துக்­கணிப்­பு­கள் வெளி­யா­கின. அதில் கமலாஹாரி­சுக்கு 48 சத­வீ­தம் மக்கள் ஆத­ர­வாக இருக்கின்­றனர் என்­றும்,டிரம்­புக்கு மக்­கள் ஆத­ரவு 44 சத­வீ­தம் உள்­ளது என்­றும் கருத்­துக் கணிப்­பு­கள் கூறின.ஆனால் தேர்­தல் நெருங்க நெருங்கநிலைமை மாறி­யது.தனக்கு எதி­ரான பல்­வேறு எதிர்­ மறை விவகா­ரங்­க­ளை­யும் பின்­னு டிரம்ப்க்­குத் தள்ளி முன்­னி­லைக்கு வந்து விட்­டதாக கணிப்­பு­கள் வெளி­யா­கின. தேர்­த­லுக்கு சில நாட்­கள் முன்­னதாக கூடபிர­பல பத்­தி­ரி­கையான நியூ­யார்க்டைம்ஸ்,’டிரம்ப் அதி­பர் பதவி வகிப்­பதற்கு தகு­தி­யற்­றவர் என்று செய்தி வெளி­யிட்­டது.இன்னொரு பிர­பலபத்­தி­ரி­கை­யான வாஷிங்­டன் போஸ்ட், கமலாஹாரி தெரி­விக்க ஸ்க்கு இருந்­த ஆத­ரவுதா­க­வும், அதை அந்த பத்­தி­ரி­கை­யின் உரி­மை­யா­ளர் நிறுத்திவிட்­டதா­க­வும் தகவல்­கள் வெளி­யா­கின. இப்­படி பல்­வேறு எதிர்­மறை தகவல்­கள் வெளி­யான நிலை­யி­லும்,வாக்­காளர்­கள் மனதில் இடம் பிடித்து டிரம்ப் கூடு­தல் ஓட்­டு­களை பெற்று வெற்றி பெற்­றுள்­ளார். தற்­போது எண்­ணப்­பட்­ட வரை மொத்­தம் 50  லட்­சத்­துக்­கும் அதி­கமான ஓட்­டு­களை அவர், கமலாவை காட்­டி­லும் கூடு­த­லாக பெற்­றுள்­ளார். தற்­போது வரை டிரம்ப் 277 எலக்ட்­ரோல் காலேஜ் ஓட்­டு­க­ளை­யும்,கமலா 226 ஓட்­டு­க­ளை­யும் பெற்­றுள்­ளனர்.இன்­னும் டிரம்ப் வெற்றி அதி­கா­ர­பூர்­வமாக அறி­விக்­கப்­பட­வில்லை. எனி­னும் கமலா ஹாரீஸ் கனவு, பகற்­க உறுதினவாகி செய்­யப்­பட்டு விட்­டது விட்­டது. இன்­னும் சற்று நேரத்­தில் டிரம்ப்நாட்டு மக்­கள் மத்­தி­யில் வெற்றி உரை­யாற்­று­வார் என்­றும் தகவல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.