கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை, நவ. 6 கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், 158 கோடி யே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், இக்கட்டிடத்தில் பல்வேறு நிறுவனங்க ளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைக ளையும் முதல்வர் வழங்கினார். இதன்மூலம் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழி ல்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார் ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழகம் விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வியல் சார்ந்த சேவைகள் தமிழகத்தில் தழைத்து வளர, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக தகவல் தொ ழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குதல், கிராமம் மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்ப த்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்பு தல், தமிழகத்தை தகவல் தொழில்நுட்ப மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல், தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொ ண்டு இவ்வரசு செயல்படுகிறது. கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் : கோவை, விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடம், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடம் அளிக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பை கொண்டுள்ளது. இப்புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தின் இரண்டு அடித்தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமும், தரை மற் றும் ஐந்து மேல் தளங்களில் தகவல் தொழில் நுட்ப அலுவ லகத்துக்கான இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 மின்தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், மழை நீர் சேகரிப்பு வசதிகள், 72 மணி நேரம் ஜெனரேட்டர் இயக்கத்துக்காக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் சேகரிப்பு தொட்டி, ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி, 1.35 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 130 கே.எல்.டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிட த்தை திறந்து வைத்த தமிழக முதல்வர், இக்கட்டிடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கினார். இதன்மூலம் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர் கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.