திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள் மிகுசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
கந்த சஷ்டி திருவிழா இன்று (02.11.2024) கொடியேற்றத்துடன் துவங்கி 07.11.2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08.11.2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது. இந்த கந்த சஷ்டிதிருவிழாவை முன்னிட்டு 2 காவல் துறைகூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற் பார்வை யில்,  6 காவல் துணைகண்காணிப்பாளர்கள், 27 காவல்ஆய்வாளர்கள் உட்பட 1000 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் மேம்படுத்தப் பட்டுள்ளது.மேற்படி கந்த சஷ்டி திருவிழாவில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (02.11.2024)  திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் காவல்துறை அதிகாரிகளுடன்ஆலோசனை  கூட்டம் நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அவர்கள் பக்தர் களின் வசதிக்காக சிறப்புதரிசனம் போது தரிசனம் எனவழிகாட்டி போர்டுகள் வைக்கவும், குடி தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தவும், கடற்கரை பகுதியில் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் கடலில் கயிறு கட்டியும்,கடற்கரையில் ரோந்து வாகனத்தில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் மற்றும் போக்குவரத்து வழித்தடங் களில் போக்குவரத்து பிரிவு காவல்துறை ஆங்காங்கே வழித்தடம் மாற்றம்,வழித்தட பாதை உட்பட அனைத்து விவரங் களையும் அறிவிப்பு பலகைகள் மூலம் வைக்கவும் உத்தர விட்டார்.  அதனைத் தொடர்ந்து கோவில் வளாகப் பகுதிகளில் ஈடுபட்டிருக்கும் போலீசாரின் பாது காப்பு பணியைஆய்வு செய்து பொதுமக்களின்உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித அசம்பா விதமும் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.