மதுரை நவம்பர் 3,மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படும்.இந்த ஆண்டிற்கான விழா நேற்று காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை,சண்முகர் சன்னதியில் சண்முகப் பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் காப்பு கட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்,மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே உணவு உண்டுவருவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சூரபத்மனை அழிக்கும் நிகழ்வு 7 ம் தேதி மாலை 6.30 சன்னதி தெருவில் உள்ளசொக்க நாதர் கோயில் முன் நடைபெறும்.கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தங்குவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் மின்விளக்கு, மின்விசிறி, பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யபட்டிருந்து.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சஷ்டி விரதம் தொடக்கம்!






