திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 02.11.24 அன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.5.30 மணிக்கு மேல் 6மணிக்குள் சுவாமி ஜெயந்தி நாதர்யாக சாலைக்குஎழுந்தருளினார். காலை 7மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும்,தீபாராதனையும்,பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெற்றது.பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனையும். மாலை3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் திருவாவடுதுறைஆதீன சஷ்டி மண்டபத்திற்கு அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 6 ம் திருநாளான வருகிற 7ந் தேதி (வியாழக்கிழமை ) மாலை 4.30 மணிக்கு கடற்கரை யில் சுவாமி ஜெயந்திநாதர்,சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் திருநாளான 8ந் தேதி(வெள்ளிக்கிழமை ) இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக் கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. கந்த சஷ்டி விழா 02.11.24 இன்று தொடங்கியதை யொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள். நெல்லை,தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர். தற்காலிககுடில்களிலும்,கோவிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியார் விடுதிகள்,திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள மடங்களிலும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர்.அவர்கள் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும்புனித நீராடி விரதத்தைதொடங்கிஉள்ளனர். சஷ்டி திருவிழாவை யொட்டிநடைபெறும் தினமும் 1லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீர்வசதி,தற்காலிக பஸ்நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.மேலும் கோவில் நிர்வாகம்,மாவட்டநிர்வாகம்,சுகாதாரத்துறை,தீயணப்பு துறைமற்றும் உள்ளாட்சிதுறை சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளன.காவல்துறை சார்பில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






